உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணி ஆட்சி எப்போது? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

கூட்டணி ஆட்சி எப்போது? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழி திருமாவளவனுக்கு பொருத்தமாக இருக்கும். குறைந்த சீட் கொடுத்தால் ஏற்க மாட்டோம்; அதிக சீட் வேண்டும்; டீ, பன்னை கொடுத்து விசிகவை ஏமாற்ற முடியாது என்றெல்லாம் போகுமிடமெல்லாம் திருமாவளவன் பேசி வருகிறார். 2016 சட்டசபை தேர்தலின்போதே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற விவாதத்தை துவங்கி வைத்தவன் நான் எனவும் கூறுகிறார். ஆனாலும், திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கவும் அவருக்கு தயக்கம். திமுகவை விட்டு பிரிந்து போனால், இப்போதுள்ள 6 எம்எல்ஏக்கள் மீண்டும் கிடைப்பார்களா? என்ற சந்தேகம்தான் தயக்கத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. அதனால்தான் இந்த தேர்தலுக்கு கூட்டணி ஆட்சி இல்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக ஒரு முறை கூறினார். அதாவது, திமுக கூட்டணியிலேயே ஒட்டிக் கொண்டிருப்பது என்பதுதான் அதற்கு அர்த்தம். இந்நிலையில், திமுகவும் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க மறுப்பது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இரண்டில் ஒன்று பலவீனமானால் கூட்டணி ஆட்சி அமைவது சாத்தியமாகும் என பதில் கொடுத்தார். இரண்டில் ஒரு கட்சி பலவீனப்பட்டு வருகிறது. அது எந்த கட்சி என்பதையும் அவர் சொன்னார்.

ஜூலை 07, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian
ஜூலை 07, 2025 13:41

எந்த காலத்திலும் தமிழக மக்கள் திமுக வை விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சி மீது இருந்த அதிருப்தி 1970களில் திமுக கூட்டணி யை ஆட்சியில் அமர்த்தியது . திமுக தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி