நேரில் சென்று அழைப்பு விடுக்கிறார் திருமாவளவன்! | Thirumavalavan | VCK | ADMK | Vijai Party | TVK
திருமாவளவன் நடத்தும் மாநாட்டில் அதிமுக , தவெக திமுகவுக்கு செக்! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடக்க உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு நேற்று முன்தினம் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது விஜய் தலைமையிலான தவெகவை அழைப்பீர்களா? என கேட்டனர். விஜய்க்கும் மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும். அவரும் கட்டாயம் பங்கேற்கலாம் என்றார். இதுகுறித்து விசிக வட்டாரங்கள் கூறியதாவது: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரையும், தவெக சார்பில் மாநில நிர்வாகி ஒருவரையும், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனுப்பி வைக்க அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இது தொடர்பாக விசிகவின் முக்கிய புள்ளி ஒருவரிடம், பழனிசாமியின் குடும்ப உறுப்பினரும், விஜய்க்கு நெருக்கமான தொழிலதிபரும் பேச்சு நடத்தியுள்ளனர். மாநாட்டு அழைப்பிதழில் அவர்கள் பெயரை அச்சிடுவது, அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய் ஆகியோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுப்பது குறித்து, கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி ஆலோசிக்கலாம் என திருமாவளவன் கூறியிருக்கிறார்.