திருமாவளவனுக்கு அன்புமணி, தினகரன், உதயகுமார் ஆதரவு | Anbumani | TTV dhinakaran | RB Udayakumar
திருமாவளவனுக்கு பெருகும் ஆதரவு திமுகவுக்கு தொடரும் குடைச்சல் கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2ல் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் ஆகியோருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி அ.தி.மு.கவுக்கு அழைப்பு விடுத்தது பேசுபொருளானது. இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என தான் பேசிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த திருமாவளவன், சிறுது நேரம் கழித்து அதை நீக்கினார். தனது அட்மின் அந்த வீடியோவை பகிர்ந்ததாகவும், பிறகு அவரே அதை நீக்கியதாகவும் திருமாவளவன் விளக்கினார். இதற்கிடையே ஆட்சி, அதிகாரத்தில் திருமாவளவன் பங்கு கேட்டது தவறில்லை என பிற கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் எதிரே வருங்கால முதல்வரே என திருமாவளவனை குறிப்பிட்டு வி.சி கட்சியினர் போஸ்டர் ஒட்டியிள்ளனர். இது திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.