கூடவே இருந்து திமுகவுக்கு விசிக அதிர்ச்சி வைத்தியம் vck | dmk | dmk alliance | Thirumavalavan
திமுக அரசை விமர்சித்து ஷாக் விசிகவுக்கு வந்துவிட்டதா வீரம்? திமுகவை பொறுத்தவரை, கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுக அரசின் திட்டங்கள், குறைகள் பற்றி கேள்வி கேட்காமல் ஆமாம் போட வேண்டும் என்றுதான் நினைக்கும். அதற்கு ஏற்ப, கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக போன்றவை விசுவாசத்துடன் நடந்து கொள்ளும். ஆனால் இந்த முறை, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொஞ்சம் வீரம் வந்துள்ளது. அவ்வப்போது திமுகவை விமர்சித்து வருகிறது. சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் 5 பேர் இறந்ததற்கு திமுக அரசை திருமாவளவன் கண்டித்துள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடு இருந்ததா? என விசாரித்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். திமுக அரசின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் சரியில்லை என்பதைதான் திருமாவளவன் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார். அவரது கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனும் மாநில அரசின் கவனக்குறைவால் சாகசம் சாதனையாக அல்லாமல் வேதனை ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார். இதற்கு முன்பும் திமுகவுக்கு எதிரான வெடிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொளுத்தி போட்டு இருக்கிறது. தாங்கள் நடத்திய மது ஒழிப்பு மாநாட்டுக்கு எதிர் கட்சியான அதிமுகவையும் அழைத்து திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. மதுக்கடைகளை மூடச்சொல்லி திமுக அரசின் அடிமடியில் கை வைத்தது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டது.