உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பரங்குன்றம் அநீதி-எல்.முருகன் ஆவேசம் thiruparankundram issue L.Murugan vs Stalin | BJP vs DMK

திருப்பரங்குன்றம் அநீதி-எல்.முருகன் ஆவேசம் thiruparankundram issue L.Murugan vs Stalin | BJP vs DMK

போலி திராவிட மாடல் கூட்டணி கட்சிகளின் இந்து விரோத செயல்பாடுகளுக்கு வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயன்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பழனியாண்டவர் கோயில் மலைப்பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது. சமீபத்தில் அங்கு ஆடு பலி கொடுக்க சென்ற நபர்களால் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், இந்துக்களுக்கு எதிராக மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றத்தை காக்க வேண்டும் என்ற உணர்வு பக்தர்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் திருப்பரங்குன்றனம் மலையின் புனிதம் காக்க இந்து முன்னணி அமைப்பினர் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதை தடுக்கவும், இந்து முன்னணியின் பிரசாரத்தை ஒடுக்கவும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சுவரொட்டி ஒட்டுபவர்கள், நோட்டீஸ் வழங்குபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு சாப்பிட்டவர்கள், அங்குள்ள சமணர் படுகைகளில் பச்சை பெயிண்ட் அடித்தவர்களை கைது செய்யாத போலீசார், முருகன் மலையைக் காக்க ஜனநாயக முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். போலீசாரின் இந்து விரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ