தோப்புக்கு செயலர் பதவி: டென்ஷன் காட்டிய முத்துசாமி Thoppu Venkatachalam admk dmk minister S. Muthu
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் முத்துசாமியும், வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவமும் உள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்க ஸ்டாலின் முடிவு செய்தார். ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளராக தோப்பு வெங்கடாசலத்தை நியமித்தார். அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் திமுகவில் இருக்கும் நாங்கள் என்ன செய்வது என திமுகவினர் மத்தியில் சலசலப்பு நிலவுகிறது. பெருந்துறை ஒன்றிய செயலாளர் சாமி, பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் ஈரோடு திமுகவில் புகைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், தனக்கு பதவி கிடைத்ததை கொண்டாடும் விதமாக தோப்பு வெங்கடாசலம், பெருந்துறையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில், கட்சித் தலைமை உத்தரவுப்படி, அமைச்சர் முத்துசாமி, எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், எம்எல்ஏ.க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார் பங்கேற்றனர்.