உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரோடு திமுகவில் பனிப்போர்: தோப்பு பதவியை பறித்த அறிவாலயம் | Thoppu Venkatasalam DMK Removal | Erode

ஈரோடு திமுகவில் பனிப்போர்: தோப்பு பதவியை பறித்த அறிவாலயம் | Thoppu Venkatasalam DMK Removal | Erode

திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதிக்கு உட்பட்ட பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட செயலாளர்களின் கீழ் இனி நிர்வகிக்கப்படும் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இரண்டு முறை அமைச்சராக இருந்தவர் வெங்கடாசலம். ஜெயலலிதா மறைவுக்கு பின் 2021 சட்டசபை தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். ஆனால் அங்கேயும் முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுக முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே உட்கட்சி மோதல் இருந்து வந்தது. இதனால், சமீப காலமாக கட்சி பணியில் ஈடுபடாமல் தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ThoppuVenkatasalam #DMK #ErodePolitics #Duraimurugan #Perundurai #Bhavani #ErodeDistrict #TNPolitics #PartyRestructuring #InternalInfighting #TamilNaduNews #PoliticalUpdates #DravidianPolitics #PoliticalNews

ஆக 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை