உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கையெழுத்து இயக்கம் ! தமிழிசை தடுத்து நிறுத்தம்! | TN BJP | Tamilisai | Chennai

கையெழுத்து இயக்கம் ! தமிழிசை தடுத்து நிறுத்தம்! | TN BJP | Tamilisai | Chennai

தமிழிசையை தடுத்து சுற்றி வளைத்த போலீஸ் சென்னையில் பரபரப்பு! தமிழக பாஜ சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சமக்கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளனர். இன்று சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜ மூத்த தலைவர் தமிழிசை கையெழுத்து வாங்க சென்றார். அனுமதி பெறாமல் வந்ததாக கூறி போலீசார் அவரை தடுத்தனர். போலீசாருக்கும் பாஜவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது, அவர் வாகனத்தில் ஏற மறுத்தார். அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை