வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்போ மட்டும் கோஸ்டிப் பூசல் இல்லையா என்ன? முந்தைய மற்றும் இன்றைய மாநில தலைகள் ஆளாளுக்கு கோஸ்டி வெச்சிக்கிட்டு திட்டிக் கொண்டும், காலை வாரி விட்டுக் கொண்டும் கட்சியை கலகலக்க வைத்து தொண்டர்களை கலகலப்பாக வெச்சிருக்காங்களே
கோஷ்டி பூசலுக்கு வழிவகுக்கும் என பாஜவினர் அச்சம்! TN BJP | Vice President | 2026 Election
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடப்பதால், அதிருப்தியில் உள்ள கட்சியினரை திருப்திப்படுத்த, தமிழக பா.ஜ. முடிவு செய்துள்ளது. இதற்காக ஏற்கனவே மாநில துணை தலைவர் பதவியில், 10 இடங்கள் உள்ள நிலையில், கூடுதலாக இருவரை நியமிக்க அனுமதிக்குமாறு, மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக பா.ஜ.வில் மாநில தலைவர் பதவிக்கு அடுத்து, 10 துணை தலைவர்கள், 12 மாநில செயலர்கள், ஐந்து பொது செயலர்கள், ஒரு பொருளாளர், ஒரு இணை பொருளாளர், ஒரு அலுவலக செயலர் உள்ளனர். பா.ஜ.வில் பல ஆண்டுகளாக பதவி கிடைக்காத சிலர் அதிருப்தியில் உள்ளனர். மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களும் பதவி கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளனர். இதனால் துணை தலைவர் பதவியை, 10ல் இருந்து 12 ஆக உயர்த்துமாறு, மேலிட தலைவர்களிடம், தமிழக பா.ஜ. பொறுப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதை மேலிடம் ஏற்க தயக்கம் காட்டுகிறது. ஆனாலும், தமிழகம் பெரிய மாநிலம் என்பதால், தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள 12 துணை தலைவர் பதவிகளுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பா.ஜ. வட்டாரம் கூறியதாவது: கடந்த ஆண்டில், ஒரு பொதுச் செயலர், இரு மாநில செயலர்கள் என, மாநில நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல எண்ணிக்கையை உயர்த்த அனுமதி கேட்கப்படுகிறது. இப்படி ஆண்டுதோறும் பதவிகளை அதிகரிப்பது கோஷ்டிகள் உருவாக வழிவகுத்து விடும். தமிழக காங்கிரசை போல, பாஜவும் கோஷ்டிகள் நிறைந்த கட்சியாக மாறிவிடும் என பாஜவினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இப்போ மட்டும் கோஸ்டிப் பூசல் இல்லையா என்ன? முந்தைய மற்றும் இன்றைய மாநில தலைகள் ஆளாளுக்கு கோஸ்டி வெச்சிக்கிட்டு திட்டிக் கொண்டும், காலை வாரி விட்டுக் கொண்டும் கட்சியை கலகலக்க வைத்து தொண்டர்களை கலகலப்பாக வெச்சிருக்காங்களே