மாவட்ட தலைவர்கள் ஒதுங்குவதால் சீரமைப்பு பணிகள் தாமதம் | TN Congress | District leaders
கட்சிக்காக கடைசி அஸ்திரம் செல்வப்பெருந்தகை திட்டம் வெற்றியில் முடியுமா? தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்களின் மனநிலை அடிப்படையில், கட்சியை மறு சீரமைக்கும் பணிகளை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை துவக்கி உள்ளார். கிராமங்களில் இருந்து மேல்மட்டம் வரை கட்சி கட்டமைப்பை சீரமைக்க அனைத்து மாவட்டங்களுக்கும் சமீபத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த பட்டியலில் ஒரு மாவட்டத்திற்கு 4 பேர் வீதம் 77 மாவட்டங்களுக்கு மாநில நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சி சீரமைப்பு பணிகள் குறித்து பேச தொடர்பு கொண்டபோது சில மாவட்ட தலைவர்கள் அந்த அழைப்பை புறக்கணித்து உள்ளனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி சேலம் நாமக்கல் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மட்டும் பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் குறிப்பாக சென்னையில் ஒரு சட்டசபை தொகுதியில் கூட பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்னமும் நடக்கவில்லை. இதனால் கட்சி சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட தலைவர்கள் கூறியதாவது எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியை வலுப்படுத்த விரும்புகிறார்.