திடீர் பயங்கரவாதிகளை வேட்டையாட போலீஸ் எடுத்த அஸ்திரம் | NIA | ATS | Salem | kanchipuram | TN crime
பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருகி வருவதால், காஞ்சிபுரம், சேலம் மற்றும் விழுப்புரத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவின் மூன்று யூனிட்டுகளை துவக்குவதற்கான பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பயங்கரவாத செயலை முறியடிக்க கியூ பிரிவு, ஒ.சி.ஐ.யு., எனப்படும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு, ஏ.டி.எஸ். எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவுகள் செயல்படுகின்றன. இந்த பிரிவினருடன் போலீஸ் ஸ்டேஷன் நுண்ணறிவு பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் இணைந்து செயல்படுகின்றனர். அதேபோல மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.