6 நாள் அலர்ட்... இடி மின்னலுடன் மீண்டும் மழை என்ட்ரி | TN rain update | TN weather today | IMD
மீண்டும் டெல்டா, தென் மாவட்டங்கள் இன்று முதல் ஊற்றப்போகும் மழை பரபரப்பு வானிலை அப்டேட் டெல்டா, தென்மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பரவலாக ஒரு வாரம் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. அதன் அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நாட்களில் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். குறிப்பாக 2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகரிக்கும். அதே நேரம் 18 முதல் 21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுதும் பரவலாக இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியசை ஒட்டி இருக்கும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.