உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மூன்றாவது முறை டிரம்ப் தப்பிய திக்திக் நொடிகள்! | Trump rally in Uniondale | Trump's Rally | Third A

மூன்றாவது முறை டிரம்ப் தப்பிய திக்திக் நொடிகள்! | Trump rally in Uniondale | Trump's Rally | Third A

காரில் பயங்கர வெடிபொருள் ஜஸ்ட் மிஸ்சில் தப்பிய டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ளார். ஒரு பக்கம் இருவருக்கும் பதவியை கைப்பற்றுவது யார் என்ற போட்டி வேகமெடுத்துள்ளது. அதே நேரம் இரண்டே மாதத்தில் டிரம்ப் மீது 3 கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறி உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜூலையில் டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போது, முதல் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது இதில் டிரம்பின் காதை குண்டு உரசி சென்றது. ரத்தம் சொட்ட அவர் நூலிழையில் உயிர் தப்பினார். அந்த ஆசாமியை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலை நடத்தியது 20 வயதான தாமஸ் மாத்யூ குரூக்ஸ் என்பது தெரிந்தது. தாமஸ் பின்னணி குறித்து எப்.பி.ஐ. படையினர் துப்பு துலக்கினர். தாமஸை தூண்டியது யார் என்பது பற்றி சரியான காரணம் கண்டறியப்படவில்லை. சளைக்காமல் மீண்டும் பிரசார களத்தில் டிரம்ப் வேகம் காட்டினார். கடந்த ஞாயிறன்று மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். புளோரிடாவில் உள்ள கோல்ப் கிளப்பில் டிரம்பை மறைந்திருந்து சுட்ட ரியான் வெஸ்லியை பாதுகாப்பு அதிகாரிகள் விரட்டி சென்று பிடித்தனர். ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளராகவும், டிரம்பின் எதிர்ப்பாளராகவும் இருந்தது விசாரணையில் தெரிந்தது. அவரிடம் விசாரணை நீடிக்கிறது. உயிருக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்தும் டிரம்ப் அஞ்சவில்லை. மீண்டும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டினார். புதனன்று அடுத்த ஷாக் அரங்கேறியது. நியூயார்க்கின் யூனியண்டேல் என்ற இடத்தில் டிரம்ப் பிரச்சார பேரணி நடக்க இருந்தது.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை