போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர் கைது | TVK | TVK Protest | Vijay party | Viral Footage | Dharmapuri
போலீசுடன் தள்ளுமுள்ளு பாய்ந்து கையை கவ்விய காட்சிகள் தருமபுரி பாலக்கோட்டில் தக்காளி சந்தை அருகே புதிதாக திறக்கப்பட்ட சொகுசு மதுபான கூடத்தை மூட தவெக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுக்கடையை முற்றுகையிட தவெகவினர் முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. அங்கிருந்த தகரத்தின் மீது ஏறிய தவெக தொண்டரை போலீசார் கீழே இறக்கினர். இதில் கோபமடைந்த தொண்டர் ஜெமினி பாதுகாப்புக்கு நின்ற கான்ஸ்டபிள் அருண் பிரசாத் கையை கடித்தார். ஜெமினி உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஜெமினி, ஜெயபிரகாஷ், கணேசன், கிருஷ்ணன், வினோத்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.