உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக கேட்ட 2 இடங்களுக்கும் போலீஸ் ரெட் சிக்னல்! | TVK | Vijay | TVK campaign | Vijay campaign

தவெக கேட்ட 2 இடங்களுக்கும் போலீஸ் ரெட் சிக்னல்! | TVK | Vijay | TVK campaign | Vijay campaign

2 மணி நேர பேச்சில் உடன்பாடு இல்லை! கரூரில் விஜய் பேசும் இடம் நீடிக்கிறது இழுபறி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை மறுநாள் பிரசாரம் செய்ய உள்ளார். விஜய் பேசுவதற்கு கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்ஜிஆர் சிலை, சர்ச் கார்னர் ஆகிய 4 இடங்களை தவெக நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தனர். அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் இன்று அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் கரூர் எஸ்பி ஆபிசில் எஸ்.பி ஜோசி தங்கையாவிடம் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி வழங்க கோரி ஆலோசனை நடத்தினார். 1 மணி நேரமாக பேச்சு நடத்தப்பட்டும் எந்த உடன்பாடும் எட்டவில்லை. கட்சி சார்பில் கேட்கப்பட்ட இடத்திற்கு போலீஸ் அனுமதி வழங்காததால் வேறு இடத்தை தேர்வு செய்து விட்டு வருவதாக கூறி ஆனந்த் சென்றார். பின் திரும்பி வந்த தவெகவினர் லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை ஆகிய 2 இடங்களில் அனுமதி கேட்டு அதிகாரிகளுடன் 1 மணி நேரம் பேச்சு நடத்தினர். சனிக்கிழமை கரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தவெக தரப்பில் குறிப்பிட்ட தொண்டர்களின் எண்ணிக்கையால் இந்த 2 பகுதிகளிலும் அனுமதி வழங்க முடியாது என போலீசார் மறுத்தனர். மாற்று இடமாக வேலுச்சாமிபுரம் பகுதியை தேர்வு செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதை தவெக தரப்பில் ஏற்காததால் கரூரில் விஜய் பிரசாரம் செய்யும் இடம் தொடர்பாக இழுபறி நீடிக்கிறது.

செப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி