உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புதிய மெகா கூட்டணியில் இணையும் முக்கிய தலைவர்கள் | Operation V | OPS | TVK Vijay | TTV Dinakaran

புதிய மெகா கூட்டணியில் இணையும் முக்கிய தலைவர்கள் | Operation V | OPS | TVK Vijay | TTV Dinakaran

ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் உருவாகும் மெகா கூட்டணி ஆப்பரேஷன் வி 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், முதல் ஆளாக அதிமுக - பாஜ கூட்டணி ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டணியில் இன்னும் வேறு கட்சிகள் இணையவில்லை. திமுகவை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள கூட்டணி அப்படியே உள்ளது. தவெக தலைவர் விஜய், கூட்டணி ஆட்சி; ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்துடன், கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியின் பிடிவாதத்தால், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக - பாஜ கூட்டணியில் இணைய முடியாத நிலை உள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க நேரம் கேட்டு, கனிவான வார்த்தைகளுடன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் மத்திய அரசை கண்டித்து, நேற்று அறிக்கை வெளியிட்டு பாஜவுக்கு எதிராக திரும்பி இருக்கிறார் ஓபிஎஸ். இதனால் திமுக - அதிமுக கூட்டணிக்கு மாற்றாக, தவெக தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைய ஓபிஎஸ்சும், தினகரனும் தயாராகி விட்டதாக, அவர்களின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து, அரசியலில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், ஓபிஎஸ், தினகரன் மட்டுமின்றி பாமக தலைவர் அன்புமணி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியையும் இணைத்து, மெகா கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பரேஷன் வி என இதற்கு பெயரிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அப்படியொரு கூட்டணி அமைந்தால், 2026 சட்டசபை தேர்தல் களம், திமுக - தவெக - என மாறி விடும் என்று, ராமச்சந்திரன் பேசி வருவதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தவெகவுடன் கூட்டணி உறுதியானால், ஏற்கனவே தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள, எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில், ஓபிஎஸ் தனி கட்சி துவங்குவார் என்றும் கூறப்படுகிறது. பெரியகுளத்தில் இருந்து இன்று சென்னை வரும் பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் நாளை ஹோட்டல் ஒன்றில் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ