தவெக மாநாட்டில் திரளும் 1.5 லட்சம் தொண்டர்கள் | TVK Manadu | Vijay Political Party Conferance
செப்டம்பர் 23ல் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் பிரமாண்ட திடலில் முதல் மாநாட்டை நடத்த அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்பியிடம், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மனு அளித்த்தார். மாநாட்டில் 1.5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தனியார் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளோம். தமிழகம் முழுதும் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தவும் இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளோம். அந்த வகையில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் தவெக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான போலீஸ் அனுமதி, பாதுகாப்பு வழங்க வேண்டும். தீயணைப்பு துறையிடமும் அனுமதி கோர உள்ளோம் என, ஆனந்த் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.