தவெக மாநாடு திடலில் குடைகளான சேர்கள் | TVK | TVK Vijay
விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடக்கிறது. 85 ஏக்கர் கொண்ட மைதானத்தில் 55 ஆயிரம் சேர்கள் போடப்பட்டுள்ளது. இப்போதே 3 லட்சம் தொண்டர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் 10 லட்சம் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருக்கை கிடைக்காது என காலையில் இருந்தே தொண்டர்கள் இடம் பிடிக்க குவிந்துள்ளனர். தடுப்புகளை உடைத்து, தடைகளை தாண்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர். வெயில் என்றும் பாராது வெட்ட வெளியில் காத்திருந்ததால் பலர் மயங்கி சரிந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி செய்தனர். வெயிலின் காரணமாக பலர் சேர்களை தலைக்கு பிடித்து கொண்டு அமர்ந்துள்ளனர்.