/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாக்டர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் உதயநிதியின் பதில் | Udhayanidhi | Chennai Doctor Issue
டாக்டர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் உதயநிதியின் பதில் | Udhayanidhi | Chennai Doctor Issue
சென்னை கிண்டி அரசு ஆஸ்பிடல் டாக்டர் பாலாஜியை விக்னேஷ் என்ற நபர் கத்தியால் குத்தினார். புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தனது அம்மாவுக்கு உரிய சிகிச்சையைத் தரவில்லை என்பதால் டாக்டரை கத்தியால் குத்தினேன் என விக்னேஷ் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு டாக்டர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்போகிறோம் என அறிவித்துள்ளனர். போதிய பாதுகாப்பு வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆஸ்பிடல்களில் டாக்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் துணை முதல்வர் உதயநிதியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நவ 13, 2024