உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எங்கே போனார் உதயநிதி? அதிர்ச்சியில் அறிவாலயம் | Udhayanidhi Absence | Anna Remembrance Day

எங்கே போனார் உதயநிதி? அதிர்ச்சியில் அறிவாலயம் | Udhayanidhi Absence | Anna Remembrance Day

மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினம் பிப்ரவரி 3ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வினர், சென்னையில் அண்ணாதுரை நினைவிடத்திற்கு பேரணியாக சென்றனர். பேரணி முடிவில், நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கவில்லை. அதேபோல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், மதியம் சமபந்தி விருந்தில் உதயநிதி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. இது குறித்து தி.மு.கவினரே அதிருப்தி தெரிவித்துள்ளனர். தி.மு.க.,வை நிறுவிய அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, பிப்ரவரி 3ம் தேதி காலை 7:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் பேரணியாக சென்று, மரியாதை செலுத்துவர் என கட்சி தலைமை அறிவித்தது. பேரணி துவங்கும் இடத்திற்கு காலை 7.45 மணிக்கு முதல்வர் வந்தார்; அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால், துணை முதல்வர் உதயநிதி வரவில்லை. அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மதியம் நடத்தப்படும் சமபந்தி விருந்தில் உதயநிதி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிப் 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 04, 2026 06:01

காலை 7.30 , 7.45 மணியா? அதை நாங்கள் பார்த்ததே இல்லையே நாங்க வர வேண்டுமென்றால் அந்த பேரணியை 12, 1 மணிக்கு வைத்திருக்க வேண்டாமா? அன்னதானத்துக்கு இவர் வந்து என்ன சாம்பார் வாலியா தூக்கபோகிறார்? அதைவிட எத்தனையோ 'முக்கிய' வேலைகள் இருந்திருக்கும் அண்ணாத்துரை எழுந்து வந்து கேட்கவா போகிறார்?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை