உதயநிதி கூட்டத்தை தவிர்த்தாரா கனிமொழி? | kanimozhi| undayanithi | dmk
தூத்துக்குடிக்கு சென்றிருந்த துணை முதல்வர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் மாவட்டத்தில் மேற்கெள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி லோக்சாபா தொகுதி எம்பி கனிமொழி கலந்து கொள்ளவில்லை. இதனால், உதயநிதி அப்செட் ஆனதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால், திமுகவின் பவள விழாவை முன்னிட்டு நடக்க இருந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை உதயநிதி ரத்து செய்துவிட்டார். உதயநிதி வருகை தொடர்பான தகவல் கனிமொழிக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கட்சியின் துணை பொதுச்செயலாளரான தமக்கு தகவல் தெரிவிக்காமல், கட்சி பவளவிழாவை ஒட்டி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாடு செய்தது கனிமொழிக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவசர வேலை இருப்பதாக கூறி கனிமொழி திடீரென சிங்கப்பூர் சென்றுவிட்டார். ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிக்க இதுதான் காரணம் என திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். இது பற்றி உதயநிதி கூறும்போதும், தூத்துக்குடி வரும்போது, கனிமொழியிடம் தகவல் தெரிவித்துவிட்டுதான் வந்தேன். அவர் அவசர வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்ததும், இருவரும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்போம் என்றார்.