உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரிட்டன் பார்லிமென்ட்டில் கால் பதிக்கும் இந்தியர்களின் முழு பட்டியல்!

பிரிட்டன் பார்லிமென்ட்டில் கால் பதிக்கும் இந்தியர்களின் முழு பட்டியல்!

பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில், மொத்தமுள்ள 650 இடங்களில் 400க்கு மேற்பட்ட இடங்களை வென்று லேபர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 100க்கு மேற்பட்ட இடங்களை பிடித்து தோல்வி அடைந்தது. பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் வெற்றிபெற்ற வென்ற இந்திய வம்சாவளியினர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் 107 பேர் போட்டியிட்ட நிலையில், 11 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். கன்சர்வேடிவ் கட்சி சார்பில், பிரதமர் ரிஷி சுனக், சூயெல்லா பிரேவர்மேன், ககன் மொகிந்திரா, ப்ரீத்தி படேல் வெற்றி பெற்றுள்ளனர். தொழிலாளர் கட்சி சார்பில், ஷிவானி ராஜா, கனிஷ்கா நாராயணன், நவேந்து மிஸ்ரா, சத்வீர் கவுர், ப்ரீத் கவுர் கில், லிசா நந்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 44.1 சதவீத ஓட்டுகளை பெற்ற உமா குமரன், பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் வென்ற முதல் தமிழர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை