உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரசை கழட்டி விட முடிவு செய்த உமர்! | Umar Abdullah | JKNC Party | Congress | Rahul

காங்கிரசை கழட்டி விட முடிவு செய்த உமர்! | Umar Abdullah | JKNC Party | Congress | Rahul

காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கல! நாங்கதான் ஜெயிச்சோம்! Desc: இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. பரபரப்பான சூழ்நிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டது. ஓட்டுகள் எண்ண துவங்கியதும் ஆரம்பத்தில் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது. ஆனால் ஹரியானாவில் பிற்பகல் 12 மணிக்கு மேல் நிலவரம் மாறியது. முன்னிலையில் சென்று கொண்டிருந்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. ஆளும் பா.ஜ முன்னிலை பெற்றது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஹரியானவில் ஆளும் கட்சியான பா.ஜ மீண்டும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. கூட்டணியில் உள்ள பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது மகன் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்பார் என அறிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் உமர் அப்துல்லா கூட்டணி ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு நிலைமையோ வேறு மாதிரி மாறியது.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை