உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதியவரை தாக்கும் விஏஓ, எஸ்ஐ: பரபரப்பு வீடியோ | Ungaludan Stalin Camp | Old man attack | SI Police

முதியவரை தாக்கும் விஏஓ, எஸ்ஐ: பரபரப்பு வீடியோ | Ungaludan Stalin Camp | Old man attack | SI Police

ஏன் நடவடிக்கை எடுக்கலை கேட்ட முதியவர் நெஞ்சில் குத்து ஸ்டாலின் முகாமில் பகீர் சம்பவ வீடியோ ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமில் முத்துப்பேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வேங்கடபதி வயது 65 என்பவர் கோரிக்கை மனு கொடுத்தார். பிறகு, அங்கிருந்த அதிகாரியிடம் அதற்கு ரசீது கேட்டுள்ளார். இதனால் வேங்கடபதிக்கும், சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சாபுதீனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. விஏஓ போலீசுக்கு போன் செய்ய சப் இன்ஸ்பெக்டர் வந்தார். அவரும் தன் பங்குக்கு வேங்கடபதி நெஞ்சில் குத்து விட்டு தாக்கினார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் பயங்கர அடிதடியில் முடிந்ததால், கோரிக்கை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். ரசீது கேட்ட முதியவரை விஏஓ, சப் இன்ஸ்பெக்டர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !