/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சரிடம் வாங்கி கட்டிய நகராட்சி ஊழியர் | Ungaludan stalin camp | Minister Nasar | MLA Krishnasamy
அமைச்சரிடம் வாங்கி கட்டிய நகராட்சி ஊழியர் | Ungaludan stalin camp | Minister Nasar | MLA Krishnasamy
தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. ஏராளமான மக்கள் மகளிர் உரிமைத் தொகை, வீட்டுமனை பட்டா, சொத்து வரி, குடிநீர் வரி, ஆதார் சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மனு அளித்தனர். அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டனர். முன்னதாக நடந்த துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் குத்து விளக்கை ஏற்றினார். அவர் ஏற்றிய பிறகு மெழுகுவர்த்தியை எம்எல்ஏ கிருஷ்ணசாமியிடம் கொடுத்தார்.
ஆக 05, 2025