/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எல்லையை தொடும் முன்பே காத்திருக்கும் ஆபத்து | US Air Force plane | USA Deported
எல்லையை தொடும் முன்பே காத்திருக்கும் ஆபத்து | US Air Force plane | USA Deported
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி 20ம் தேதி ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார். அதன் பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐநா அமைப்புகளில் இருந்து வெளியேறுவது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது என பல உத்தரவுகள் பிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார். அதன்படி பிரேசில், மெக்சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின் சி17 என்ற ராணுவ விமானத்தில் 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
பிப் 06, 2025