உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹவுதி கோட்டையில் டிரம்ப் வைத்த வெடி-பகீர் வீடியோ US attacks houthi video | Iran vs Israel | houthi

ஹவுதி கோட்டையில் டிரம்ப் வைத்த வெடி-பகீர் வீடியோ US attacks houthi video | Iran vs Israel | houthi

ஹவுதியை கதறவிட்ட டிரம்ப் அட்டாக் ஏமனில் புகுந்து அமெரிக்கா சம்பவம்! குண்டு மழை பொழியும் பரபரப்பு வீடியோ ரிலீஸ் காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புலா பயங்கரவாதிகளை வளர்ப்பது போல் ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது ஈரான். ஏமனில் பல இடங்களை ஹவுதி கிளர்ச்சி படையினர் பிடித்து விட்டனர். தலைநகர் சனாவே இவர்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரை துவங்கியதும், ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்க ஆரம்பித்தது ஹவுதி. ஏமனில் இருந்த படி நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. செங்கடலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அந்த வழியாக செல்லும் கப்பல்களை குண்டு வீசி தாக்குவதும் ஹவுதிகளின் வழக்கம். இஸ்ரேல் கப்பல்கள் மட்டும் இன்றி இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா, பிரிட்டனின் கப்பலையும் தாக்கி வந்தது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வந்ததும் அடக்கி வாசித்த ஹவுதி, காசாவுக்கு ஆதரவாக மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்தது. செங்கடலில் வரும் இஸ்ரேல் கப்பல்களை குண்டு வீசி தகர்ப்போம் என்று நேற்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் களம் இறங்கினார். செங்கடலில் செல்லும் கப்பலை தாக்கினால் ஹவுதியை அழித்து விடுவேன் என்று மிரட்டினார். அதோடு நிற்காமல் இரவோடு இரவாக ஹவுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தவும் அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவு போட்டார். மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க படையில் இருந்து போர் விமானங்கள் ஏமனை நோக்கி பறந்தன. சனாவில் உள்ள ஹவுதிகளின் முகாம்களை குறி வைத்து குண்டு மழை பொழிந்தன. இதில் ஹவுதி கட்டமைப்புகள் சுக்குநூறாகின. பயங்கரவாதிகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்பான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆனால், மிருகத்தனமாக தாக்குதல் மூலம் அப்பாவி மக்களை அமெரிக்கா கொன்று விட்டது என்று ஹவுதி கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதற்கிடையே தாக்குதல் தொடர்பாக டிரம்ப் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அவர் கூறியது: ஹவுதி பயங்கரவாதிகளுக்கு சொல்கிறேன். உங்கள் காலம் முடிந்து விட்டது. இன்று முதல் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் முன்பு எப்போதும் பார்த்திராத நரகத்துக்கு சமமான குண்டு மழை உங்கள் மேல் பொழியும். எனவே அமெரிக்க மக்களையோ, அதிபரையோ, செங்கடலில் செல்லும் கப்பலையோ அச்சுறுத்தாதீர்கள். அப்படி செய்தால், கவனமாக இருங்கள். அடுத்து நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் நீங்களே பொறுப்பு. உங்களை முற்றாக அழிக்கும் வரை குண்டு வீசி தாக்குவோம் என்று டிரம்ப் எச்சரித்தார். ஏமனில் கிளர்ச்சி செய்து வந்த ஹவுதிகள் ஏமன் தலைநகர் சனாவை 2014ல் கைப்பற்றினர். தொடர்ந்து உள்நாட்டு போர் தொடர்ந்தது. 2022ல் போர் நிறுத்தம் வந்தது. ஆனால் உள் நாட்டில் கிளர்ச்சி செய்வதை நிறுத்தி விட்டு, இஸ்ரேலுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தது ஹவுதி. செங்கடலில் செல்லும் கப்பல்களை தாக்க ஆரம்பித்தது. 2023 முதல் அமெரிக்க போர் கப்பல்கள் மீது மட்டும் 174 முறை அட்டாக் செய்திருக்கின்றனர். இதே போல் அமெரிக்காவின் 145 வணிக கப்பல்களையும் அவர்கள் தாக்கி இருக்கின்றனர். எனவே தான் ஹவுதிகளை அழிக்க டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். அவர் 2வது முறை அதிபர் ஆன பிறகு ஹவுதிகள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மார் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை