உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்கா vs சீனா: உலகை பதற வைக்கும் சண்டை US vs China | Trump vs Xi Jinping | trade war to real war

அமெரிக்கா vs சீனா: உலகை பதற வைக்கும் சண்டை US vs China | Trump vs Xi Jinping | trade war to real war

‛சீனாவை போரில் பந்தாட தயார் அமெரிக்கா வீசிய பெரிய குண்டு! உலகமே பதறுவது ஏன் திடுக்கிடும் பின்னணி அமெரிக்கா, சீனா இடையே தீவிரம் அடைந்து வரும் வர்த்தக சண்டை இப்போது நேரடியான போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அதிரடியாக வரி போடுவோம் என்று அதிபராக பதவி ஏற்ற அன்றே டிரம்ப் சொல்லி இருந்தார். அடுத்த சில நாட்களில் சீனாவில் இருந்து இறங்கும் பொருட்களுக்கு ஏற்கனவே இருக்கும் வரியுடன் சேர்த்து கூடுதலாக 10 சதவீதம் வரி போட்டார். வர்த்தகப்போரை தூண்ட வேண்டாம் என்று எச்சரித்த சீனா, சர்வதேச வர்த்தக கவுன்சிலில் முறையிட்டது. பழிக்குப்பழி நடவடிக்கையாக அமெரிக்காவின் சில வகை பொருட்களுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வரியும் விதித்தது. இப்போது ஒரு மாதம் கழித்து மீண்டும் சீனாவுக்கு எதிராக டிரம்ப் வரி விதித்து அதிர வைத்துள்ளார். ஏற்கனவே கூடுதலாக போட்ட 10 சதவீத வரியை அப்படியே டபுளாக்கினார். மீண்டும் சீனா டென்ஷன் ஆனது. அமெரிக்காவில் இருந்து வரும் சோயா பீன்ஸ், மாட்டு இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு 10 சதவீதமும் கோதுமை, மக்காச்சோளம், பருத்தி, கோழி இறைச்சிக்கு 15 சதவீதமும் வரி போட்டு பதிலடி கொடுத்தது. இதற்கிடையே அமெரிக்க பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஏப்ரல் 2ம் தேதி 3வது கட்டமாக சீனாவுக்கு எதிராக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்கா மீது ஆத்திரத்தில் இருந்த சீனா இந்த முறை கொதித்துப்போனது. அமெரிக்காவுடன் போருக்கு தயார் என்று அறிவித்தது. Fentanyl போதை பொருள் புழக்கத்தை காரணம் காட்டி வரி விதிப்பது டிரம்பின் அற்பமான சாக்குப்போக்கு. மனிதாபிமான அடிப்படையிலும் அமெரிக்கா மீதான நல்லெண்ண அடிப்படையிலும் இந்த பிரச்னையில் அமெரிக்காவுக்கு உதவ நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் சீனாவின் நடவடிக்கையை அங்கீகரிக்காமல், பழி சுமத்தவும், அச்சுறுத்தவும் முயற்சிக்கிறது அமெரிக்கா. மிரட்டலுக்கு ஒரு போதும் சீனா பயப்படாது; கொடுமையான வரி விதிப்பு எங்களிடம் வேலை செய்யாது; அழுத்தம் கொடுப்பதோ, அச்சுறுத்துவதோ சீனாவை கையாளுவதற்கான சரியான வழி இல்லை. இந்த வழியை தேர்வு செய்யும் எவரும் சீனா பற்றி தப்பு கணக்கு போட்டு இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம். அமெரிக்கா போரை விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அது வரி போராக இருந்தாலும் சரி; வர்த்தகப் போராக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த விதமான போராக இருந்தாலும் சரி, இறுதி வரை சண்டை செய்ய தயார் என்று சீனா அறிவித்தது. சீனாவின் பகிரங்கமான போர் அறிவிப்பு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது, சீனாவுடன் போருக்கு தயார் என்று அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனும் அறிவித்து இருப்பது பதற்றத்தை உச்சக்கட்டத்துக்கு கொண்டு வந்து விட்டது. இது பற்றி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறியது: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா போருக்கு தயார் நிலையில் உள்ளது. போரில் வெற்றி பெறுவதற்கு ராணுவ வலிமை முக்கியமானது. எனவே தான் நாங்கள் எங்கள் ராணுவத்தை வேகமாக கட்டி எழுப்புகிறோம். சீனாவோ அல்லது வேறு யாரோ போரை விரும்பினால், நாம் வலுவாக இருக்க வேண்டும். ராணுவ வலிமை மூலம் தான் அமைதியை கொண்டு வர முடியும் என்று நம் அதிபர் டிரம்ப் தீர்க்கமாக நம்புகிறார். எனவே நாங்கள் வலிமையான ராணுவத்தை வைத்திருக்கிறோம் என்று பீட் ஹெக்செத் கூறினார். ராணுவத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி உச்சத்தில் இருக்கும் இரு நாடுகளும் போருக்கு தயார் என்று அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே காசா போர், உக்ரைன் போரில் இன்னும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை; அப்படி இருக்க இரு வல்லரசு நாடுகள் சண்டைக்கு தயாராவது சர்வதேச நாடுகளை பதற்றத்தில் தள்ளி இருக்கிறது.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை