/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ருத்ரபிரயாக், சமோலியில் மீண்டும் மேகவெடிப்பு; வெள்ளம், நிலச்சரிவால் பலர் பாதிப்பு Uttarakhand | Rain
ருத்ரபிரயாக், சமோலியில் மீண்டும் மேகவெடிப்பு; வெள்ளம், நிலச்சரிவால் பலர் பாதிப்பு Uttarakhand | Rain
உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ருத்ரபிரயோக், சமோலி, கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு செல்லும் பாதைகளில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பலரது வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்ததால், மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆக 29, 2025