வைகோ நடைபயணம்: டெல்லிக்கு காங்கிரஸ் அனுப்பிய தகவல் | Vaiko | Stalin | Dinamalar
மதிமுக பொதுச்செயலர் வைகோ, மது ஒழிப்பு, போதை புழக்கத்தை எதிர்த்து ஜனவரி 2ல் திருச்சியிலிருந்து சமத்துவ நடைபயணம் துவங்குகிறார். இதை துவக்கி வைக்க வருமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் அழைப்பிதழ் வழங்கி அழைத்தார். வைகோவின் அழைப்பிதழின் முகப்பு அட்டையில், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றுள்ளது. அழைப்பிதழில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அழைப்பிதழில் பிரபாகரன் படம் இடம் பெற்றுள்ளதால், அந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடாது என காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.