உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெகவுக்கு முழுக்கு போட்டார் வைஷ்ணவி | Vaishnavi left | TVK | Vijay | Coimbatore |

தவெகவுக்கு முழுக்கு போட்டார் வைஷ்ணவி | Vaishnavi left | TVK | Vijay | Coimbatore |

தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகுவதாக கோவை, கவுண்டம்பாளையம் 16வது வார்டை சேர்ந்த வைஷ்ணவி தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்தேன். கடந்த 3 மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என் வளர்ச்சியை தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்க சிலர் செயல்படுகிறார்கள். பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, பொதுசெயலாளரை சந்திக்க மேடை ஏறினால் மனித சங்கிலியால் நுழையவிடாமல் கீழே தள்ளவிட்டது என தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன். நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ.. நீயெல்லாம் ஒரு பெண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்படுகிறேன். என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்றும் வைஷ்ணவி கூறியுள்ளார்.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை