இதைவிட கொடுமை வேறு எதுவும் கிடையாது | Vanathi Srinivasan | National President | Mahila Morcha | BJP
சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்னா போலீஸ் எதுக்கு? அந்த அளவு மோசமாகிவிட்டதா? பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளூரில் தேசியக்கொடியுடன் டூவீலர் பேரணி செல்ல அனுமதி கேட்டு, கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாவட்ட பாஜ இளைஞரணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் வாகன பேரணியால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். போக்குவரத்து நெரிசல், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த பதில் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அந்நியர் ஆட்சியில், சுதந்திரத்திற்காக போராடிய காலத்தில்தான், தேசியக்கொடி பேரணி நடத்த தடை விதிப்பார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகும் தேசியக்கொடி பேரணிக்கு போலீசார் தடை விதிப்பதை என்னவென்று சொல்வது? தேசியக்கொடி பேரணி நடத்துவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றால் காவல்துறை எதற்கு? அந்த அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கிறதா? காவல்துறை செயலிழந்து விட்டதா? அல்லது சுயமாக செயல்படாமல் யாருடைய உத்தரவின் பெயரில் செயல்படுகிறதா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.