உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலை கருத்துக்கு வானதி ரியாக் ஷன் இதுதான் | Vanathi Srinivasan | Annamalai | BJP | Annapoorna

அண்ணாமலை கருத்துக்கு வானதி ரியாக் ஷன் இதுதான் | Vanathi Srinivasan | Annamalai | BJP | Annapoorna

அண்ணாமலை சொன்னா....! வானதி தந்த ரியாக் ஷன் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் விளக்கிச் சொல்லி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அவரது பேச்சு வைரலானது. ப்ரத் ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சிகள், சீனிவாசன் வீடியோவை சுட்டிக்காட்டி மத்திய அரசை குறை கூற துவங்கியதால் அவரே நிர்மலா சீதாராமனை சந்தித்து தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். தான் எந்த கட்சியையும் சாராதவன் என விளக்கமளித்தார். ப்ரத் உடனே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கிளர்ந்தெழுந்தன. ஜிஎஸ்டியில் உள்ள குறைகளை சொன்னால் மிரட்டுவதா? என கேட்டனர். இது அரசியல் பிரச்னையாக மாறியது. அன்னபூர்ணா சீனிவாசன், தாமாக வந்துதான் மன்னிப்பு கேட்டார் என வானதி சீனிவாசன் விளக்கமளித்தார். லண்டனி்ல் இருக்கும் அண்ணாமலை இந்த சர்ச்சையில் தலையிட்டார். ஓட்டல் உரிமையாளரும் நிதி அமைச்சரும் தனிப்பட்ட முறையில் உரையாடும் வீடியோவை பொது வெளியில் பாஜ நிர்வாகிகள் பகிர்ந்ததற்காக, தமிழக பாஜ சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறினார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி