/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூட்டணி கட்சிகளை கபளீகரம் செய்வது யார்? வானதி கேள்வி | Vanathi Srinivasan | BJP | National President
கூட்டணி கட்சிகளை கபளீகரம் செய்வது யார்? வானதி கேள்வி | Vanathi Srinivasan | BJP | National President
பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழகத்தை சேர்ந்த ஒருவர், ஒடிசா முதல்வராவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார். தமிழை தாய்மொழியாகவும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா, மைசூரில் பிறந்தவர் என்பதற்காக கன்னடர் என்றும், எம்ஜிஆர் மலையாளி என்றும், வைகோவை கலிங்கப்பட்டி தெலுங்கர் என்றும் வசைபாடிய ஒரு கட்சி, தமிழகத்தை சேர்ந்த ஒருவர், ஒடிசா முதல்வராவதை பாஜ எதிர்த்தது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
ஜூன் 09, 2025