சமூக நீதி எங்கே போச்சு; திமுக அரசு இரட்டை வேடம் | Vanathi Seenivasan | Bjp MLA | Covai
நேரடி நியமனம் எதிர்த்த ஸ்டாலின் இதுக்கு என்ன சொல்ல போகிறார்? பா.ஜ எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அறிக்கை: மத்திய அரசு நிறுவனங்களில் நேரடி நியமனம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து காலங்காலமாக இருக்கிறது. ஆனால், இது ஏதோ புதிய திட்டம் போல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வர் ஸ்டாலினும் அவரது பங்கிற்கு சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என விமர்சித்தார். சிறுபான்மை சமூக அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் செயல் எனவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் திமுக அரசு, முதல்வர் ஸ்டாலினின் இரட்டை வேடத்தை தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் தோலுரித்து காட்டியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே, அரசு துறைகளில் ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமனங்கள் எந்த வரைமுறையும் இன்றி செய்யப்படுவதுடன், ஊதிய நிர்ணயத்துக்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை என தெரிவித்துள்ளது.