கரூரில் நடத்த விவகாரம்: திருமாவளவன் வரை போனது | VCK | Karur | Thirumavalavan
கட்சி நிதிக்கு ₹30,000 கொடு! விசிக நிர்வாகி வசூல் அடாவடி கரூர் பஞ்சப்பட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். சொந்தமாக லாரிகள் வைத்து டிரான்ஸ்போர்ட் தொழில் செய்கிறார். இவரது லாரி டிரைவர் சுப்ரமணி திண்டுக்கலில் மண் ஏற்றிக்கொண்டு கரூர் புன்னம் நோக்கி வந்துள்ளார். அப்போது இடையில் லாரியை மாறித்த சிலர் ஓனர் யார் என கேட்டு டிரைவர் சுப்ரமணியிடம் தகராறு செய்துள்ளனர். அவரிடம் இருந்து சேகரின் செல்போன் நம்பரை வாங்கி, உன் லாரி டிரைவரை பிடித்து வைத்து இருக்கிறோம்; வந்து பணத்தை கொடுத்துட்டு கூட்டிகிட்டு போ என மிரட்டி உள்ளனர். பதறிப்போன சேகர் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றார். அங்கே வக்கீல் ராஜா என்பவர் தன்னை விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். கட்சி கூட்டத்துக்கு 30 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளார். சேகர் தர முடியாது என கூறி இருக்கிறார். இதனால் ஆத்திராமடைந்த விசிக நிர்வாகி ராஜா, நான் கட்சியில் இருக்கேன்னு சொல்றேன். நீ என்கிட்டையே ரூல்ஸ் பேசுறியா என தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். ஒழுங்கா நான் கேட்ட பணத்தை குடு. இல்லாட்டி இங்க இருந்து லாரியை எடுத்துக்கிட்டு போக முடியாது என மிரட்டி இருக்கிறார்.