/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக ஓட்டு விஜய்க்குதான்: உதயநிதிக்கு இப்போதே உதறுது | Vellore Ibrahim BJP | Thirumavalavan
திமுக ஓட்டு விஜய்க்குதான்: உதயநிதிக்கு இப்போதே உதறுது | Vellore Ibrahim BJP | Thirumavalavan
இதிலும் அரசியல் செய்வதா? கயவர்கள் திட்டம் எடுபடாது திருமாவளவன், கம்யூவை காய்ச்சி எடுத்த இப்ராஹிம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியான சுற்றுலா பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்வு வேலூர் இப்ராஹிம் தலைமையில் சென்னை பரணிபுத்தூரில் நடந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை முழங்கினார்கள். திடீரென அவர்கள் பாகிஸ்தான் கொடியை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதிகளை தூண்டி விடும் பாகிஸ்தானை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது, வேலூர் இப்ராஹிம் கூறுகையில், பஹல்காம் சம்பவத்திலும் இண்டி கூட்டணி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
ஏப் 28, 2025