உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நீதிபதி சுதர்சன் ரெட்டி போடும் கணக்கு சரியாக வருமா? | Vice President | Sudershan Reddy | Congress

நீதிபதி சுதர்சன் ரெட்டி போடும் கணக்கு சரியாக வருமா? | Vice President | Sudershan Reddy | Congress

வேட்பு மனு தாக்கலுக்கு முன்... சுதர்சன் அசாத்திய நம்பிக்கை! அந்த வகையில் பார்த்தா எனக்கு.....! துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், நாட்டின் 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 9ம்தேதி தேர்தல் நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்ட்ர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடியும் நிலையில், இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி, இன்று, காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா முன்னிலையில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். சரத் பவார், திருச்சி சிவா, சஞ்சய் ராவத் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் உடன் சென்றிருந்தனர். துணை ஜனாதிபதி தேர்தலில் லோக்சபா, ராஜ்ய சபா என பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் உள்ள உறுப்பினர்கள் ஓட்டளிக்க தகுதியானவர்கள். 543 245 788 இரு சபைகளிலும் சேர்த்து மொத்த எம்பிக்கள் 788. இரு சபைகளிலும் சேர்த்து ஆறு காலி இடங்கள் போக தற்போது 786 எம்பிக்கள் உள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 394 ஓட்டு பெற வேண்டும். 542 எம்பிக்களை கொண்ட லோக்சபாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 293 ஆக உள்ளது. 240 உறுப்பினர்களை கொண்ட ராஜ்ய சபாவில் 129 எம்.பி.க்களின் ஆதரவு தேஜ கூட்டணிக்கு இருக்கிறது. ஆக மொத்தம் 422 ஒட்டுகிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதை சுட்டிக்காட்டி, எந்த நம்பிக்கையில் போட்டியிடுகிறீர்கள்? என சுதர்சன் ரெட்டியிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: நம்பர் ஒரு பெரிய விஷயமே இல்லை; இது, கொள்கைகளுக்கு இடையில் நடக்கும் போட்டி. நான் எந்த கட்சியையும் சாராத நடுநிலையான நபர்: அதனால் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் என்னை ஆதரிப்பார்கள் என சுதர்சன் ரெட்டி நம்பிக்கையுடன் கூறினார். செப்டம்பர் 9ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்ததும் மாலை 5 மணிக்கு பிறகு ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது

ஆக 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ