/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சபை மரபை கவர்னர் கடைபிடிக்க வேண்டும் | Vijay - Governor Ravi | Assembly reaction
சபை மரபை கவர்னர் கடைபிடிக்க வேண்டும் | Vijay - Governor Ravi | Assembly reaction
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. கூட்டம் தொடங்கியதும் தேசிய கீதம் பாடாமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக கூறி கவர்னர் ரவி சட்டசபையை விட்டு வெளியேறினார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட சட்டசபை மரபு காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர் யாராக இருந்தாலும் சட்டசபை மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஜன 06, 2025