சாலைகள் எங்கும் திரண்டு நிற்கும் தவெக தொண்டர்கள் | Vijay | TVK | Vijay Speech | Vijay campaign | Vi
முதல் தேர்தல் பிரசார பயணத்தை தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். திருச்சி ஏர்போர்ட்டில் அவர் கிளம்பியதில் இருந்து சாலையின் இருபுறமும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். திருச்சி மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை அருகே அவர் பேச இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. காலை 10.30 முதல் 11 மணி வரை அவர் பேச போலீசார் அனுமதி கொடுத்து இருந்தார். ஆனால் திட்டமிட்ட நேரத்தை கடந்தும் விஜய் மரக்கடை பகுதியை அடையவில்லை. ஆயிரக்கணக்காக தொண்டர்கள் சூழ விஜய் பிரசார பஸ் ஊர்ந்து கொண்டே வருகிறது. அவர் செல்லும் வழியில் பல இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. தவெக தலைவர் விஜய் பேச உள்ள திருச்சி மரக்கடை பகுதியிலும் ஆயிரக்கணக்கில் தவெக தொண்டர்கள் திரண்டு சாலைகள் ஸ்தம்பித்து உள்ளன. #TVK | #Vijay | #Vijaycampaign | #VijayinTiruchy | #TVKTiruchycampaign