உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கச்சத்தீவு விஷயத்தில் திமுக அந்தர் பல்டி: தவெக கண்டனம்

கச்சத்தீவு விஷயத்தில் திமுக அந்தர் பல்டி: தவெக கண்டனம்

1974ல் கச்சத்தீவு கைவிட்டு போக காரணம் ஆட்சி அதிகார பசிகொண்ட அன்று ஆட்சியில் இருந்த திமுகதான். 1999 முதல் 2014 வரை மத்திய அரசு இயங்கியதே திமுகவின் தயவில்தான். அப்போதெல்லாம் கச்சத்தீவை கண்டுகொள்ளாமல், இப்போது தேர்தல் வருவதால் தனித்தீர்மானம் இயற்றம் திமுக அரசின் அந்தர்பல்டி அரசியலை தவெக கண்டிக்கிறது. கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய பாஜ அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்வது கண்டிக்கதக்கது. கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு. அதுவரை இடைக்கால தீர்வாக 99 ஆண்டுகளுக்கு குத்தகையாக கச்சத்தீவை பெற வேண்டும். அதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடி கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்தி பெற வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை