ஆடியோ ஷாக்! விஜய் முதல் பிரசாரம் சொதப்பிய பின்னணி tvk vijay campaign | vijay campaign audio issue
மிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்கான முதல் பிரசார சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து இன்று துவங்கி இருக்கிறார். திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து இருந்தனர். காலை 11 மணி அளவில் அந்த இடத்துக்கு விஜய் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சரியான நேரத்தில் திருச்சி ஏர்போர்ட் வந்த விஜய், அங்கிருந்து பிரசார வேனில் புறப்பட்டார். வழிநெடுக தொண்டர்கள் காத்திருந்தனர். ரோட்டில் விஜய் வாகனம் ஊர்ந்து சென்றது. ஏர்போர்ட்டில் இருந்து மரக்கடை வர 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. பிரமாண்ட கூட்டத்துக்கு நடுவே விஜய் கெத்தாக பேச ஆரம்பித்தார். சில நிமிடங்களிலேயே ஆடியோ மக்கர் பண்ண ஆரம்பித்து விட்டது. முதலில் அவர் வைத்திருந்த மைக் திடீரென வேலை செய்யவில்லை. அதன் பிறகு புதிய மைக் கொடுக்கப்பட்டது. அதில் தான் அவர் முழுதும் பேசினார். ஆனால் அவர் பேச்சு முழுமையாக வெளியே கேட்கவில்லை. 100 மீட்டர் தூரத்தில் இருந்தவர்கள் கூட விஜய் என்ன பேசுகிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.