வக்பு வாரிய திருத்த மசோதாவை ஆதரிக்கும் முஸ்லிம்கள் Waqf amendment bill 2024 | Pm Modi
வக்பு வாரிய திருத்த மசோதா எதிர்ப்பை உடைத்த முஸ்லிம்கள் வீதியில் திரண்ட முஸ்லிம் பெண்கள் வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்கான வக்பு வாரிய சட்டம் -1995ல் சில திருத்தங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ல் இதற்கான மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணைக்கு மசோதாவை உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தின. மத்திய அரசும் அதற்கு ஒப்புக்கொண்டது. பாஜ எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையை கூட்டு விசாரணைக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் புதிய திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு, நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் முதலான கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவை தாக்கல் செய்த பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். வக்பு திருத்த மசோதா நிறைவேறினால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்தனர். லோக்சபாவில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் முஸ்லிம் பெண்கள் தெருக்களில் ஒன்று கூடி, வக்பு வாரிய திருத்த சட்டத்தை வரவேற்பதாக கூறினர். மோடி ஜி நன்றி, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் எங்களுக்காக போராடுங்கள் என்ற போஸ்டர்களை காட்டி மத்திய அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். கைகளில் ரோஜா பூக்களுடன் மத்திய அரசுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.