எம்எல்ஏக்கள் ரகளையால் காஷ்மீர் சட்டசபையில் களேபரம் Waqf Board amendment Bill| Clash over Kashmir As
வக்ப் சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர, ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், எதிர்கட்சியான PDP எம்எல்ஏக்கள் நேற்று வலியுறுத்தினர். சபாநாயகர் அப்துல் ரஹீம் மறுத்ததால் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின. இன்று, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏக்களும் வக்ப் சட்ட திருத்தத்துக்கு எதிராக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். சபாநாயகர் மறுத்தார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்எல்ஏக்கள், சபையை நடத்த விடாமல், மையப்பகுதியில் கூடி, சபாநாயகருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரம் அரசின் முதன்மையான பிரச்னைகளுக்கு இல்லை. அதை விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என சபாநாயகர் விளக்கம் அளித்தார். அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் சுரேந்தர் சவுத்ரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒரு விஷயம் குறித்து விவாதிக்க நினைக்கின்றனர். அப்போது அது அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்க வேண்டும். அவர்களை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். பிடிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் துண்டு சீட்டுகளை கிழித்து சபையில் வீசினர். அமளி அதிகரித்ததால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இச்சூழலில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை மாற்ற வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.