உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சீரழியும் தமிழகம் | Edappadi Palanisamy | ADMK | CM Stalin | DMK | Women se

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சீரழியும் தமிழகம் | Edappadi Palanisamy | ADMK | CM Stalin | DMK | Women se

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய தருணம். சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றி பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இதுபோன்ற கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி நடக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதே இதற்கு காரணம். தமிழகம் இப்படி சிக்கி சீரழிவது பற்றி எந்த கவலையும் இல்லாத ஸ்டாலின், பெண்களுக்கு பாதுகாப்பு என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா? திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது. இனியாவது ஸ்டாலின் மாடல் அரசு விழித்து கொண்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை