நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்க அதிரடி காட்டும் வீரர்கள் | Anti Naxal Operation | Chhattisgarh
சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைகள் ஒன்றோடொன்று ஒட்டி அமைந்துள்ளன. இந்த மாநிலங்களின் எல்லை பகுதிகளை ஒட்டிய வனப்பகுதி மற்றும் மலைகளில் நக்சல் அமைப்பினர் பதுங்கி இருந்து சதிச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டும் மக்கள் நலத்திட்டங்களை எதிர்க்கும் இவர்கள், அப்பாவி மக்களை காெடுமைப்படுத்தி அவர்களிடம் இருந்து, பணம், உணவுப் பொருட்களை பறித்து செல்கின்றனர். ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத நக்சல்கள், தொடர்ந்து தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேற்கண்ட மாநிலங்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் சவால்களை சந்திக்கின்றன.