உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 2வது வீடியோ... ஹமாஸ் தலைவன் கதை முடித்த கடைசி காட்சி | Israel vs Hamas | Yahya Sinwar last video

2வது வீடியோ... ஹமாஸ் தலைவன் கதை முடித்த கடைசி காட்சி | Israel vs Hamas | Yahya Sinwar last video

காசாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரில் வைத்து ஹமாஸ் தலைவன் யாஹ்யா சின்வாரை வியாழக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தீர்த்துக்கட்டியது. ராஃபாவில் வழக்கமான ரோந்து செல்லும் போது 3 பயங்கரவாதிகளை பீரங்கி குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் இஸ்ரேல் வீரர்கள் கொன்றனர். அதில் ஒருத்தன் தான் யாஹ்யா சின்வார் என்பது தெரியவந்தது. முன்பு அவன் 22 வருடங்கள் இஸ்ரேல் சிறையில் இருந்தான். அந்த நேரத்தில் அவனது தாடை வரிசை, கைரேகையை இஸ்ரேல் ராணுவம் சேகரித்து வைத்திருந்தது. சிறையில் இருந்த போது அவன் முளையில் இருந்த கட்டியை அகற்றி இஸ்ரேல் டாக்டர்கள் காப்பாற்றினர். அப்போது அவனுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து இருந்தனர். அவன் கொல்லப்பட்டதும் அவனது உடலில் இருந்து எடுத்த கைரேகை, தாடை வரிசை சின்வாரின் பழைய ரிப்போர்ட்டுடன் ஒத்து போனது. டிஎன்ஏ டெஸ்டிலும் இப்போது கொல்லப்பட்டது சின்வார் தான் என்பது உறுதியானது. சம்பவம் நடந்த போது, சின்வார் தஞ்சம் புகுந்த கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் வீரர்கள் பீரங்கி குண்டுகளை வீசினர். பின்னர் அங்கு என்ன நிலை என்று சோதிக்க ட்ரோனை அனுப்பினர். அவன் மாடியில் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடைக்கும் காட்சியை ட்ரோன் படம் பிடித்தது. அந்த ட்ரோனை நோக்கி ஒரு கம்பை எறிந்தான் சின்வார். இது தொடர்பான வீடியோவை ஏற்கனவே இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி