உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சூடு பிடிக்கிறது ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை | Armstrong Case | Armstrong case update | Rowdy Nagendr

சூடு பிடிக்கிறது ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை | Armstrong Case | Armstrong case update | Rowdy Nagendr

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் போலீஸ் காவலில் உள்ளனர். தந்தை, மகனிடம் தனிப்படை அலுவலகத்தில் நேருக்கு நேர் விசாரணை நடக்கிறது. விதிகளை மீறி சிறையில் இருந்து, அஸ்வத்தாமன் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டது ஏன் என நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பினர். நான் தொடர்பு கொள்ளவில்லை என கூறிய நாகேந்திரன் ஆதாரங்களை காட்டியதும் மவுனம் சாதித்துள்ளார். திருவள்ளூர் ஒரக்காடு பகுதியில் 150 கோடி மதிப்புள்ள நிலம் விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்குடன் பிரச்னை இருந்ததா? இது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கை அஸ்வத்தாமன் சந்தித்தது ஏன்? ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசியது என்ன போன்ற கேள்விகளுக்கும் மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி