உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / விபத்தில் சிக்கிய கார்! உயிர் தப்பியது அஸ்வத்தாமன் குடும்பம் |

விபத்தில் சிக்கிய கார்! உயிர் தப்பியது அஸ்வத்தாமன் குடும்பம் |

தமிழக பாஜவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு நேற்று குடும்பத்துடன் காரில் சென்றார். இன்று அதிகாலை 4.30மணி அளவில் விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் மேம்பாலத்தில் கார் வந்து கொண்டு இருந்தது. மேம்பாலத்தில் கார் இறங்கிய போது முன்னே சென்ற வேன் சடன் பிரேக் அடித்ததால் வேனின் பின்பக்கத்தில் மோதி விபத்தில் சிக்கியது. முன்பக்கம் முழுதும் சேதமாகி கண்ணாடி நொறுங்கியது. அஸ்வத்தாமனின் மகனுக்கு மட்டும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அஸ்வத்தாமன் மற்றும் மற்றவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் காரின் முன்பக்கத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜூன் 11, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Srinivasan A
ஜூலை 29, 2025 13:28

விபத்தில் இருந்து திரு. அஸ்வத்தாமன் மீண்டு வர இறைவன் அருள். புரியட்டும்.


Srinivasan A
ஜூலை 29, 2025 13:07

நல்ல மனிதர் சீக்கிரம் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் குணமாகி வீடு திரும்ப இறைவனை மனமார வேண்டுகிறேன்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை