சென்னை ஏடிஎம்மில் பணம் திருட முயன்ற வடமாநில கும்பல் கைது | ATM theft 3 men arrested chennai
சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு 3 ஆசாமிகள் வந்தனர். ஒருவன் வெளியில் நி்ன்று கொள்ள மற்ற இருவரும் உள்ளே சென்றனர். கள்ளச்சாவியை போட்டு ஏடிஎம் எந்திரத்தை திறக்க முயன்றனர். ஒரு டோர் திறந்தது. பணம் இருக்கும் கம்பார்ட்மென்ட்டை திறக்க முயன்றனர். முடியவில்லை. அதற்குள் பணம் எடுக்க ஒருநபர் வந்ததால், மூவரும் அங்கிருந்து சென்று விட்டனர். ஆசாமிகள் ஏடிஎம்மில் செய்த தில்லு முல்லு வேலையால் மும்பையில் உள்ள எஸ் பி ஐ தலைமை கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்தது. உடனடியாக சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரப்பட்டு, திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். சிசிடிவி வீடியோவை கைப்பற்றினர்.